பதிவு செய்த நாள்
16
ஜன
2019
02:01
பவானி: பவானியில், ஐயப்பன் கோவில் மகரஜோதி திருவீதி உலா நடந்தது. ஈரோடு மாவட்டம், பவானி, தேவபுரத்திலுள்ள ஐயப்பன், தர்ம சாஸ்தா கோவிலில், ஆண்டுதோறும் மகரஜோதி திருவீதி உலா நடந்து வருகிறது. அதையொட்டி, நேற்று முன்தினம் (ஜன.,14ல்) காலை, மூலவருக்கு, பல வகையான திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப் பட்டு, மஹா தீபாராதனை நடந்தது.
இரவு 9:00 மணிக்கு, ஐயப்பன் மற்றும் தர்மசாஸ்தா உற்சவருக்கு, முத்துகளால், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, திருவீதி உலா நடந்தது. இதில், செண்டை மேளம், சிங்காரி மேளம் மற்றும் தையங்களி நடன நிகழ்ச்சியுடன், திருவீதி உலா சென்றது. பவானி தேவபுரத்தில் இருந்து, புறப்பட்டு, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, ஐயப்பன் கோவிலை அடைந்தது. மகர ஜோதி திருவீதி உலா, ஏற்பாடுகளை கோவில் குருசாமி ஜெயராமன் செய்திருந்தார். நிகழ்ச்சியில், அமைச்சர் கருப்பணன், அ.தி.மு.க., நகர செயலாளர் கிருஷ்ண ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.