பதிவு செய்த நாள்
16
ஜன
2019
02:01
கொடுமுடி: பொங்கல் விழாவை முன்னிட்டு, பாசூரில் மகா மாரியம்மன் கோவிலில் திருவீதி உலா நடந்தது. கொடுமுடி, பாசூர் அருகே வேங்கியாம் பாளையத்தில், சித்தி விநாயகர், மகா மாரியம்மன், பகவதி அம்மன் கோவில் உள்ளது.
கோவில்பொங்கல் விழா, கடந்த 8ம் தேதி இரவு, பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தினந் தோறும் 7:00 மணிக்கு, சிறப்பு பூஜைகள், 10ம் தேதி இரவு, கம்பம் நடுதல் நடந்தது. நேற்று (ஜன., 15ல்) மாலை 6:00 மணிக்கு, சிறப்பு அலங்காரத்தில், அம்மன் திருவீதி உலா நடந்தது.
நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று (ஜன., 16ல்) அதிகாலை 4:30 மணிக்கு, முப்பாட்டு மாவிளக்கு பூஜையும், நாளை (ஜன., 17ல்) மதியம், 12:00 மணிக்கு, காவேரி பூஜையும், தீர்த்தம் மற்றும் பால்குடம் எடுத்து வருதல், அக்னி கும்பம் எடுத்தல், காவடிப்பூஜை, பொங்கல் வைத்தல் உள்ளிட்டவையும், இரவு 7:00 மணிக்கு, கம்பம் பிடுங்குதல், 18, பகல் 12:00 மணிக்கு, எடுத்துக்கட்டி ஏலம் விடுதல் நிகழ்வும், தொடர்ந்து, மாலை 4:00 மணிக்கு, மஞ்சள் நீராட்டு விழா, ஊஞ்சல் உற்சவம், மகா தீபாராதனை நடக்கிறது.