பதிவு செய்த நாள்
16
ஜன
2019
02:01
அந்தியூர்: அந்தியூர் அடுத்த, தாமரைக்கரை - பர்கூர், செல்லும் சாலையில், பழமை வாய்ந்த குந்துகட்டு பசுவேஸ்வரர், கோவில் உள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் உள்ள இக்கோவிலில், ஆண்டுதோறும், ஜன, 16ல், மாட்டு பொங்கலன்று, திருவிழா நடக்கும். ஒரே நாளில், காலையில் துவங்கி மாலையில் நிறைவடையும். மாட்டு பொங்கலன்று, நடக்கும் திருவிழாவுக்கு, பர்கூர், தாமரைக்கரை, பெஜிலிட்டி, ஒந்தனை உட்பட அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வர். திருவிழாவிழாவையொட்டி, பர்கூர் போலீசார், வனத்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணிகளை செய்து வருகின்றனர்.