பதிவு செய்த நாள்
17
ஜன
2019
02:01
வடவள்ளி:மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவில் தைப்பூசத்திருவிழாவில், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த மாணவர் தன்னார்வலர்களை நியமிக்க பக்தர்கள் வலியுறுத்தி யுள்ளனர்.
மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் நேற்றுமுன் தினம், (ஜன., 15ல் )கொடியேற்றத் துடன் தைப்பூசத்திருவிழா துவங்கியது.
தைப்பொங்கல் அன்று தைப்பூசத்திருவிழா துவங்கியதால், பக்தர்கள் கூட்டம் அதிகரித் துள்ளது. மலையடிவாரத்திலும், மலைப்பகுதியிலும், அடிக்கடி போக்குவரத்து
நெரிசல் ஏற்படுகிறது. மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தாலும், பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், பார்க்கிங் பகுதியை ஒழுங்குபடுத்தி வாகனங்களை சரியாக நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மருதமலைக்கோவில் துணை கமிஷனர் (பொ) மேனகா கூறுகையில்,பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. தைப்பூசத்தன்று பக்தர்கள்
கூட்டத்தை கட்டுப்படுத்த, தன்னார்வலர்கள் நியமிக்கப்படுவர். தைப்பூசத்தன்று தனியார் கார் மற்றும் பைக்குகள், மலை மேல் அனுமதிக்கப்பட மாட்டாது. படிக்கட்டு வழியாகவும், தேவஸ்தான பஸ் வாயிலாகவும் பக்தர்கள் மலைக்கு செல்லலாம், என்றார்.