பதிவு செய்த நாள்
17
ஜன
2019
02:01
திருப்பூர்:பழநி பாத யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு, திருப்பூர் மற்றும் காங்கயம் போலீசார் சார்பில், ஒளிரும் பட்டைகள் அணிவிக்கப்பட்டன.
தைப்பூசத்தை முன்னிட்டு, பழநி பாத யாத்திரைக்கு செல்லும், கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள், பல்லடம், குண்டடம் வழியாகவும், திருப்பூர், கொடுவாய்
வழியாகவும் செல்கின்றனர். ஈரோடு, சேலம், தர்மபுரி, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் காங்கயம், ஊதியூர் வழியாக அதிகளவில் செல்கின்றனர்.
விபத்து நிகழாமல் பாதுகாப்புடன் செல்ல, போலீசார் சார்பில், தாராபுரம் ரோடு கோவில் வழியில் உள்ள போலீஸ் செக் போஸ்ட்டில் உரிய விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, நேற்று (ஜன., 16ல்), திருப்பூர் ரூரல் போலீசார், பக்தர்களுக்கு ஒளிரும் பட்டைகள் அணிவித்தனர். அதேபோல், காங்கயத்தில், போலீசார் மற்றும் தன்னர்வலர்கள் சார்பில், பழநி பாத யாத்திரை செல்லும் பக்தர்களுக்கான் விழிப்புணர்வு முகாம் மையம், காங்கயம் போலீஸ் ஸ்டேஷன் எதிரில் அமைக்கப்பட்டது.
காங்கயம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தலைமையில், பக்தர்களுக்கு ஒளிரும் பட்டை அணிவிக்கப்பட்டது; பக்தர்களுக்கு குடிநீரும் வழங்கப்பட்டது.