காஞ்சிபுரம் அடுத்த, உக்கம் பெரும்பாக்கத்தில் 108 கோ பூஜை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜன 2019 02:01
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த, உக்கம்பெரும்பாக்கம், 27 நட்சத்திர விருட்ச விநாயகர் கோவிலில், 108 கோ பூஜை விழா நடந்தது.
காஞ்சிபுரம் - வந்தவாசி நெடுஞ்சாலை உக்கம்பெரும்பாக்கத்தில், நட்சத்திர விருட்ச விநாயகர் மற்றும், 27 நட்சத்திர அதிதேவதைகளின் கோவில் உள்ளது.காணும் பொங்கலை ஒட்டி, நேற்று (ஜன., 17ல்) காலை, 9:00 மணிக்கு, 27 நட்சத்திர அதிதேவதைகள், சனீஸ்வரர், ராகு கேது ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து, 108 கோ பூஜை விழா நடந்தது.