பதிவு செய்த நாள்
18
ஜன
2019
02:01
காஞ்சிபுரம்: கூரம் கிராமத்தில் உள்ள, கூரத்தாழ்வானின், 1,009வது திருவவதார மஹோற்சவம் நேற்று (ஜன., 17ல்) துவங்கியது. காஞ்சிபுரம் அடுத்த கூரம் கிராமத்தில், ஆதிகேசவப்பெருமாள் மற்றும் கூரத்தாழ்வான் கோவில் உள்ளது.
இக்கோவிலில் ஆண்டுதோறும், தை மாதம், கூரத்தாழ்வானின், திருஅவதார மஹோற்சவம், 10 நாட்கள் நடைபெறும்.அதன்படி இந்தாண்டு, 1,009வது திருவவதார மஹோற்சவம் நேற்று (ஜன., 17ல்) துவங்கியது. இதில், காலை ஆஸ்தான புறப்பாடும், இரவு, சிம்ம வாகன புறப்பாடும் நடந்தது.தொடர்ந்து, 10 நாட்கள் நடைபெறும் உற்சவத்தில், காலையில், திருப்பல்லக்கிலும், மாலையில், பல்வேறு வாகனங்களில் கூரத்தாழ்வான் எழுந்தருளி உலா வருகிறார். ஒன்பதாம் நாள், பிரபல உற்சவமான, ஜன., 25ல், காலை, 8:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.