பதிவு செய்த நாள்
18
ஜன
2019
02:01
ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேவசப் பெருமாள் கோவிலில் நேற்று (ஜன., 17ல்) , பாரி வேட்டை உற்சவம் நடந்தது.
ஸ்ரீபெரும்புதூரில், ஆதிகேசவப் பெருமாள் மற்றும் ராமானுஜர் கோவில் உள்ளது. காணும் பொங்கல் விழாவை முன்னிட்டு, இங்கு நேற்று (ஜன., 17ல்) பாரி வேட்டை உற்சவம் நடந்தது. ஆதிகேசவப் பெருமாளும், ராமானுஜரும் கோவிலில் இருந்து எழுந்தரு,ளி ஸ்ரீபெரும்புதூர் வீதிகளில் உலா சென்று, வீ.ஆர்.பி., சத்திரத்தில் உள்ள பாரி வேட்டை மண்டபத்தை சென்றடைந்தனர். அங்கு, இருவருக்கு விசஷே திருமஞ்சனம் நடந்தது. இரவு, பாரி வேட்டை மண்டபத்தில் இருந்து, குதிரை வாகனத்தில், ஆதிகேசவப் பெருமாள் கோவிலை சென்றடைந்தார்.இந்த விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிப்பட்டனர்.