பதிவு செய்த நாள்
18
ஜன
2019
02:01
திருவள்ளூர்: திருவள்ளூரில், வீரராகவர் கோவிலில், ஏகாதசி திருமஞ்சனம் நடந்தது.நூற்றி எட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான, திருவள்ளூர், வீரராகவர் கோவிலில், ஏகாதசியை முன்னிட்டு, பெருமாள் திருமஞ்சனம் நேற்று (ஜன.,17ல்), காலை, 10:00 மணியளவில் நடந்தது.பின், உற்சவர், வீரராகவ பெருமாள், மாலையில் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திருவள்ளூர் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து, திரளான பக்தர்கள் வந்து, வீரராகவ பெருமாளை தரிசித்தனர்.இன்று, காலை, 4:30 மணியளவில், தனுர் மாத பூஜை நடக்கிறது.