பதிவு செய்த நாள்
19
ஜன
2019
02:01
திருமுடிவாக்கம்:சிறுவர்களுக்கான இலவச தியான முகாம், திருமுடிவாக்கத்தில் நாளை 20ல், நடைபெறுகிறது. குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கத்தில், தம்ம சேது, விபஸ்ஸனா தினா மையம் அமைந்துள்ளது.இங்கு, சிறுவர்களுக்கான ஒருநாள் இலவச, ஆனாபானா தியானம் முகாம், நாளை 20ல், நடைபெற உள்ளது. காலை, 8:30 முதல் மாலை, 4:30 மணி வரை, தியான முகாம் நடக்கும். இதில், 10 முதல், 18 வயது வரை உள்ள மாணவ - மாணவியர்கள் பங்கேற்கலாம்.இதே நேரத்தில், பெற்றோருக்கான ஒருநாள், விபஸ்ஸனா தியான விழிப்புணர்வு முகாமும் நடைபெறும். இந்த இலவச முகாமில் பங்கேற்க விரும்புவோர், 94440 21622 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.