பதிவு செய்த நாள்
21
ஜன
2019
03:01
தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி அருகே நாகம்பட்டியில் முகூர்த்தம்மாள், கண்ணம்மாள், நாகம்மாள் கோயில்
கும்பாபிஷேகம் நடந்தது.முதல்நாள் அனுக்ஞை, தேவதா அனுக்ஞை, மஹா சங்கல்பம், பஞ்சகவ்ய, கணபதி பூஜை, வாஸ்து சாந்தி, கலாகர்ஷாணம், யாகசாலை பிரவேசம், முதல்கால யாக பூஜைகள் துவங்கி தீபாராதனை நடந்து பிரசாதம் வழங்கப்பட்டது. இரண்டாம் கால பூஜை, தீபாராதனை, மூன்றாம் நாள் யாத்ரா தானம், கடம்புறப்பாடு உள்ளிட்டவை நடந்தது.
குன்னுவராயன்கோட்டை விஸ்வநாதசிவாச்சாரியார் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கவுரிய நாயுடு பாலகோதர பங்காளிகள் செய்தனர்.