பதிவு செய்த நாள்
21
ஜன
2019
04:01
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, புதுப்பேட்டையில் உள்ள, 87 ஆண்டுகள் பழமையான வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று (ஜன., 20ல்) நடந்தது. இதையொட்டி, 19ல், காலை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் நடந்தது.
தொடர்ந்து புதுப்பேட்டை மகிளா சங்கத்தினரின் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. மேலும் விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, புனித மண் எடுத்தல், யாகசாலை பிரவேசம், வேதிகா அர்ச்சனை, துவார பூஜை, பூர்ணாஹுதி, தீபாராதனை நடந்தது. நேற்று (ஜன., 20ல்) காலை, 10:45 மணிக்கு கும்பாபிஷேக த்தையொட்டி கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றினர். தொடர்ந்து மூலஸ்தான அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை ஆகியவை நடந்தது.
ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, புதுப்பேட்டை ஆர்ய வைஸ்ய சமூகத்தினர் செய்திருந்தனர்.