பதிவு செய்த நாள்
22
ஜன
2019
04:01
குமாரபாளையம்: குமாரபாளையம், ஷீரடி சாய்பாபா கோவிலில், திருக்குட நன்னீராட்டு விழா நடந்தது. குமாரபாளையம்- பள்ளிபாளையம் சாலை, எம்.ஜி.ஆர்., நகர் பஸ் நிறுத்தம் எதிரில்,
பூலக்காடு செல்லும் வழியில், ஷீரடி சாய்பாபா துவாரகாமாயி கோவில் பணி நடந்து வந்தது. கோவில் திருக்குட நன்னீராட்டு விழாவில், முகூர்த்தக்கால் அமைக்கும் பணி, நேற்று முன்தினம் (ஜன., 20ல்)நடந்தது.
நேற்று (ஜன., 21ல்) அதிகாலை விநாயகர் மற்றும் திருவிளக்கு வழிபாடு, யாக சாலை வேள்வி; தொடர்ந்து, திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடந்தது. சாய்பாபா சுவாமியின் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. நிகழ்ச்சியை சாந்தலிங்கர் நெறி மன்ற சுந்தரமூர்த்தி, தஞ்சை முத்துக்குமார சுவாமி குழுவினர் நடத்தினர். அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.