பதிவு செய்த நாள்
24
பிப்
2012
03:02
எல்லா தானங்களிலும் அன்னதானம் விசேஷம். பகவானும் கீதையில், எவன் தனக்காக மட்டும் ஆகாரம் தேடிச் சாப்பிட்டுக் கொள்கிறானோ,அவனுடைய பாவத்தையும் முழுக்க அவனே தான் அனுபவித்தாக வேண்டும். வேறு யாரும் அதில் பங்கு எடுத்துக் கொள்ளமாட்டார்கள், என்கிறார். அன்னதானத்துக்கு என்ன விசேஷம் என்றால், இதிலே தான் ஒருத்தரைப் பூரணமாகத் திருப்திப்படுத்த முடியும். பணம், காசு, வஸ்திரம், நகை, பூமி, வீடு இந்த மாதிரியானவற்றை எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிக் கொள்கிறவன் அதற்கு மேல் தந்தாலும் போதும் என்று சொல்ல மாட்டான். அன்னம் போடுகிற போது தான், ஒருத்தன் என்ன தான் முட்ட முட்டச் சாப்பிட்டாலும் ஓர் அளவுக்கு மேல் சாப்பிட முடியாது. நேராக உயிரோடு உடம்பைச் சேர்த்து வைத்து ரட்சிப்பதும் அன்னம் தான். அதனால் தான், உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்று சொல்வர். மணிமேகலை என்னும் காப்பியம் இப்படி அன்னதான விசேஷத்தைச் சொல்லியிருக்கிறது. மணிமேகலைக்கு காஞ்சியில் அட்சயபாத்திரம் கிடைத்து, அவள் அதை வைத்துக் கொண்டு சகல ஜனங்களின் பசிப்பிணியைப் போக்கினாள். இதற்கு அநேக யுகங்கள் முந்தியே சாக்ஷõத் அம்பாளும் இதே அன்னதானத்தை இங்கு பண்ணியிருக்கிறாள். ஜகன்மாதா இங்கே, இரு நாழி நெல் கொண்டு எண்நான்கு அறம் இயற்றினாள் என்று சொல்லியிருக்கிறது. இங்கே அன்னபூரணிக்கு சந்நிதி இருக் கிறது.
-விளக்குகிறார் காஞ்சிப்பெரியவர்.