பதிவு செய்த நாள்
24
ஜன
2019
02:01
குளித்தலை: காவல்காரன்பட்டியில், 19ம் ஆண்டு, சக்திபூஜை மற்றும் பாதயாத்திரை நடைபெற்றது. குளித்தலை அடுத்த, காவல்காரன்பட்டியில், வள்ளிதேவசேனா சுப்பிரமணியர் கோவில் முன், பாலமுருகன் பாதயாத்திரைக் குழு சார்பில், 19ம் ஆண்டு சக்தி பூஜை நடந்தது. குருசாமி குப்பமுத்து தலைமை வகித்தார்.
காவடி எடுத்து, அலகு குத்தி வந்த பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். பூஜைக்குப் பின், 50க்கும் மேற்பட்ட பக்தர்கள், பழநி பாதயாத்திரை பயணத்தை துவக்கினர். விழாக்குழு சார்பில், அன்னதானம் வழங்கப்பட்டது. பாதயாத்திரையில், காவல்காரன்பட்டி, வடசேரி, காரணாம்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த முருக பக்தர்கள் கலந்துகொண்டனர்.