பிரதோஷ வேளையில் நரசிம்மரையும் வழிபடுவது விசேஷம் என்று பலர் கூறுகிறார்கள். உண்மைதானா?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24பிப் 2012 04:02
பொதுவாக பிரதோஷ காலத்தில் பெருமாளுக்கு ஆராதனை கிடையாது. நிருசிம்மம் ராகவம் விநா என்பது சாஸ்திரம். அதாவது பிரதோஷ வேளையில் நரசிம்மரையும் ஸ்ரீராம பிரானையும் தவிர மற்றைய கோலங்களில் உள்ள ஸ்ரீ மஹாவிஷ்ணுவை ஸேவிக்கக்கூடாது என்பது பொருள். மற்றபடி வழிபடுவதால் விசேஷம் என்றும் கூறப்படவில்லை. வைணவ சம்பிரதாயத்தில் வழக்கிலும் இல்லை.