விழுப்புரம்: விழுப்புரத்தில் தெய்வ தமிழ் சங்கம் சார்பில் இன்று 25ம் தேதி திருவையாறு நிகழ்ச்சி நடக்கிறது.விழுப்புரம் சங்கர மடத்தெரு சங்கரா ஹாலில், தெய்வ தமிழ் சங்கம் சார்பில் இன்று 25ம் தேதி காலை 8:00 மணிக்கு திருவையாறு நிகழ்ச்சி நடக்கிறது. காலை 9:30 மணிக்கு பஞ்சரத்ன கீர்த்தனையும், காலை 10:00 மணிக்கு தியாகராஜர் உருவப்படத்திற்கு மகா தீபாராதனை நடக்கிறது.இதை தொடர்ந்து, மாலை 4:00 மணிக்கு ஏராளமான இசை கலைஞர்கள் பங்கேற்கும் திருவையாறு நிகழ்ச்சி நடக்கிறது.