திருத்தணி : திருத்தணி அடுத்த, பட்டாபிராமபுரம் கிராமத்தில், 27ம் தேதி, காலை முதல், நள்ளிரவு வரை, முருகன் மலைக்கோவிலில் இருந்து, உற்சவர் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் பட்டாபிராமபுரம் சென்று, வீதியுலா வந்து பக்தர் களுக்கு அருள்பாலிக்கிறார்.அன்று மாலை, அதே கிராமத்தில் உள்ள பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் உற்சவர் முருகப் பெருமானுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து மலர் அலங்காரம் மற்றும் வீதியுலா நிகழ்ச்சி நடக்கிறது.