பதிவு செய்த நாள்
26
ஜன
2019
01:01
கோவை:திருச்சி ரோடு, ஒண்டிப்புதுாரிலுள்ளது கோவை காமாட்சிபுரி ஆதீனம், மகா சக்தி அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில். கோவில் குண்டம் திருவிழா, கடந்த 22ம் தேதி விநாயகர் வேள்வியுடன் துவங்கியது. 23ம் தேதி விழா கொடியேற்றப்பட்டது. நேற்று இரவு, குண்டத்துக்கு பூ இடுதல் நிகழ்ச்சி நடந்தது.இன்று காலை, 9:00 மணிக்கு பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மகா சக்தி வேள்வி, மகா அபிேஷகம், மாவிளக்கு பூஜை, ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. நாளை காலை, மஞ்சள் நீர் உற்சவம், அம்மன் வீதியுலா நடக்கிறது. காலை, 11:30 மணிக்கு, விழா கொடி இறக்கப்படுகிறது. மாலை, 6:30 மணிக்கு, கம்பம் கலைத்தல், தெப்பத்திருவிழாவும், இரவு, 8:00 மணிக்கு, அன்ன வாகன உற்சவமும் நடக்கிறது. வரும் 28 ம் தேதி மாலை, விளக்கு வழிபாடு, மறு பூஜை, வசந்த விழாவுடன் குண்டம் திருவிழா நிறைவடைகிறது.