பதிவு செய்த நாள்
26
ஜன
2019
01:01
கூரம்: கூரத்தாழ்வான் கோவிலில், நேற்று தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.காஞ்சிபுரம் அடுத்த, கூரம் கிராமத்தில், ஆதிகேசவப்பெருமாள் மற்றும் கூரத்தாழ்வான் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும், தை மாதம் கூரத்தாழ்வான் மகோற்சவம் நடக்கும். இந்த ஆண்டு, 1,009வது ஆண்டு மகோற்சவம் ஜன., 17ல் துவங்கியது.ஒன்பதாம் நாளான நேற்று, காலை, 8:45 மணிக்கு, கூரத்தாழ்வான் தேரில் எழுந்தருளினார். பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.பிரதான வீதிகள் வழியாக சென்று, மீண்டும் கோவிலை வந்தடைந்தது தேர். பக்தர்கள், கோவிந்தா... கோவிந்தா... என, பக்தர்கள் கோஷம் எழுப்பி கூரத்தாழ்வானை வணங்கினர்.