பதிவு செய்த நாள்
26
ஜன
2019
01:01
விருதுநகர் : நதிகள், ஆறுகள் பெரும்பாலும் பெண்களின் பெயர்களை தாங்கி பாய்கிறது. இந்தியாவிலே ஆண் பெயரில் பாய்ந்தோடிவரும் ஒரே ஆறு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கவுசிகா ஆறுதான். கவுசிஹா முனிவர் தவம் இருந்து இடம்தான் கவுசிகா ஆற்றங்கரை என புராணம் கூறுகிறது. இந்த நதிக்கரையில் 800 ஆண்டுகள் முன்பு பாண்டிய மன்னர் காலத்தில் கட்டி வழிபட்ட சிவலாயங்களில் ஒன்று விருதுநகர் மீனாட்சி உடனுறை சொக்கநாதர் சுவாமி கோயில் , இங்கு சிவனாகிய இறைவன் சொக்கநாதர் ராஜா அவதாரம், மீனாட்சி ராணி அவதாரத்திலும் அருள் பாலிக்கின்றனர். இங்குள்ள சொக்கநாதர் மீனாட்சிக்கு படிக்காசு தந்த சொக்கநாதர் , மீனாட்சி என்ற சிறப்பு பெயரும் உள்ளது.
இக் கோயிலுக்கு வரும் பக்தர்கள், இறைவா இன்றைய உழைப்பிற்கு உரிய (சம்பளம்) படிகொடு என வேண்டினால் அன்றைய உழைப்பின் ஊதியத்தை இறைவன் எந்த வழியிலும் கொடுத்து விடுவார். பக்தர்களின் உழைப்பின் வியர்வை உணர்ந்த இறைவன் நம்பியவர்களை கைவிடுவதில்லை என்ற அதீத நம்பிக்கை பக்தர்களிடம் உள்ளது.இவ்வளவு சிறப்பு பெற்ற இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் விருட்ஷ சாஸ்திர முறையில் இறைவனை வழிபடுவதற்கு விருட்ஷ சாஸ்திர தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.வேதத்தின் அடிப்படையில் ஆகம விதிகளின் படி சிலை வடிவில் உள்ள இறைவனை வழிபடுகிறோம். இது வழக்கமான நம் வழிபாடு. இறைவன் நேரில் காட்சி தருவதில்லை. மாறாக மனித உருவில் இறைவனாக வாழ்ந்த ரமண மகரிஷி, யோகிராம் சூரத் குமார் போன்ற மகான்கள் பார்வை படுவதும் அவர்களின் ஆசீர்வாதம் பெறுவதுமே பெரும் பாக்கியம். குருவின் மூலம் இறைவன் அடையாளம் காட்டப்பட்டு முறையே வழிபட்டால் அமானுஷ்யமான சக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. சித்தர்கள் வழிகாட்டிய விருட்ஷ சாஸ்திரத்தில் இறைவனை வழிபட்டால் வாழ்வின் கரும வினைகளின் தாக்கம் குறைந்து சகல செல்வங்களையும் பெற்று வாழலாம் என்பது ஐதீகம்.
சித்தர்கள் வழிகாட்டிய விருட்ஷ சாஸ்திர முறையில் விருதுநகர் மீனாட்சி உடனுறை சொக்கநாதர் கோயிலில் 12 ராசிகளுக்கும், 27 நட்சத்திரங்களுக்கும் உரிய மரங்களை நட்டு வளர்த்து வருகின்றனர் பக்தர்கள்.----இதுவும் ஓர் இறைத்தொண்டுஆன்மிகத்தில் ஏற்பட்ட ஆர்வத்தால் ஓய்வு போலீஸ் அதிகாரி ஒருவரின் ஆலோசனையில் விருட்ஷ சாஸ்திர தோட்டம் உருவாக்கி உள்ளோம். ராசி, நட்சத்திரத்திற்கு உரிய மரக்கன்றுகளை தேடி அலைந்து நட்டு பராமரிக்கிறோம். ஒரு நட்சத்திரத்திற்கு நான்கு பாத மரங்கள் உள்ளன. அந்த நடத்திர பாத மரங்களை அறிந்து அவற்றை நட்டு பராமரித்தால் நல்ல பலன் கிடைக்கும். அதன் பலனை நானே அனுபவித்து வருகிறேன். மரங்கள் வளர்ப்பதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பதுடன் சுத்தமான ஆக்சிஜன் பெற முடியும். திருமுறை மன்றத்தினருடன் இணைந்து வாரத்தில் மூன்று நாட்கள் மரக்கன்று பராமரிப்பில் ஈடுபடுகிறோம். குறிப்பிட்ட நடத்திரம், ராசிக்கு உரிய மரத்திற்கு நீர் விட்டு வளர்த்தால் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்கள் குறைந்து மேன்மை பெறலாம்.கார்த்திக், விருதுநகர்.வீடுகளிலும் வளர்க்கலாம்கோயிலில் வளர்க்கப்படும் மரங்களுக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் தண்ணீர் ஊற்றுவேன். இதுபோன்ற மரங்களை அந்தந்த ராசிக்காரர்கள் வீடு, அலுவலகளில் வளர்த்தால் நன்மை கிடைக்கும். இதனால் வாழ்வு வளம்பெறும்.முனியாண்டி, பக்தர், விருதுநகர்.மேஷம் :- மகிழம், புங்கன், வென்தேக்குரிஷபம்- : மந்தாரை, வேம்புமிதுனம் -: செங்கருங்காலி, மலைவேம்புகடகம்- : புன்னை, பலாசிம்மம்- : பவளமல்லி, புங்கன்கன்னி- : அரசமரம், தங்க அரலிதுலாம்- : மருது, மஞ்சள், கொன்றை, மந்தாரைவிருச்சிகம் : பூவரசு, மகிழம், மருது, தேக்கு, வேம்புதனுசு :- செண்பகம், சந்தானம், எலுமிச்சைமகரம்- : வன்னி, சீத்தாகும்பம்- : கடம்பு, பரம்பபை, புன்னை, ஜாதிக்காய்மீனம்- : மல்லி, தேமா, செஞ்சந்தனம்.சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்இறைவழிபாட்டில் விருட்ஷ சாஸ்திரத்தில் குறிப்பிட்பிட்டுள்ளபடி ராசி, நட்சத்திரத்திற்கு ஏற்ற மரங்களை வளர்த்தால் நல்ல பலன் கிடைக்கும். மரம் வளர்ப்பும் இறை தொண்டுதான். இதுபோல் மற்ற கோயில்களிலும் மரம் வளர்த்தால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். இங்கு மாவுலிங்க பெண் மரம் உள்ளது. இம் மரத்திலான நந்தி சிலைகள், துணை தெய்வ சிலைகள் செய்வதற்கு உகந்த மரம். விஷ பூச்சிகள் சிலந்தி, தேரை கடித்தால் இதன் இலையை தேய்த்தால் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.ேஷாபனா, கோயில் திருமுறை மன்றம்,விருதுநகர்.அறிய வேண்டிய ஒன்றுகோயிலுக்கு வந்து தினமும் கடவுளுக்கு சேவை செய்வது எங்களுக்கு கிடைத்த பெரும் பாக்கியம். இங்குள்ள வனத்தில் அரியவகை மரங்கள், மூலிகை பற்றி இளம் தலைமுறை அறிந்து கொள்ள வேண்டும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் கடவுளுக்கு சேவையாற்ற வேண்டும்.ராஜசுலோச்சனா, திருமுறை மன்றம், விருதுநகர்.