பதிவு செய்த நாள்
28
ஜன
2019
11:01
காரைக்கால்: காரைக்காலில் ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர், சனிஸ்வரபகவான் கோவிலை சுற்றியுள்ள 9 கோவில்களுக்கு நேற்று மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
காரைக்கால் திருநள்ளார் ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் மற்றும் சனிஸ்வரபகவான் தேவஸ்தானத்தைச் சார்ந்த ஸ்ரீஆனந்தகணபதி, ஸ்ரீநளவிநாயகர்,நான்குவீதி விநாயகர்கள் மற்றும் கிராம தேவதைகள் ஸ்ரீஐயனார்,பிடாரி,மாரியம்மன் உள்ளிட்ட 9 கோவில்களில் நேற்று மகாகும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. திருநள்ளார் ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோவிலில் திருஞானசம்பந்தர்,திருநாவுக்கரசர்,சுந்தரர் ஆகிய மூவர் பாடியகோவில் சிறப்புஅம்சங்களுடன் உள்ளது.இக்கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 24ம் தேதி அனுக்ஞை விக்நேச்வரபூஜை,மஹா கணபதி ஹோமத்துடன் துவக்கியது.
கடந்த 25ம் தேதி முதல்கால யாகபூஜை துவக்கியது.நேற்று காலை மண்டபாராதனம், பிம்பசுத்தி, நாடீசந்தானம் காலை 8.45 மணி முதல் 11.10மணிக்குள் ஸ்ரீஆனந்தகணபதி, ப்ரமம்தீர்த்த விநாயகர், சத்ரகோடி விநாயகர், சம்பந்த நாயகர், சித்திவிநாயகர், சக்திவிநாயகர், நளம் தீர்த்த விநாயகர்,மகாமாரியம்மன், பைரவர் உள்ளிட்ட கோவிலை சுற்றியுள்ளா நான்கு வீதிகளில் உள்ள கோவில்களில் மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.இதில் வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன்,கலெக்டர் விக்ரந்தராஜா. எஸ்.பி.,மாரிமுத்து, வீரவல்லபன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு கும்பாபிஷேகத்தை கண்டுக்களித்தனர்.