பதிவு செய்த நாள்
28
ஜன
2019
01:01
கொடுமுடி: கொடுமுடியில், புது மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா, நாளை ஜன.,29, இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது. தொடர்ந்து, 30 முதல் பிப்.,3ம் தேதி வரை, தினமும் காலை, 6:00 மணிக்கு, மேளக் கச்சேரியுடன் காவிரியிலிருந்து யானை மீது, தீர்த்தக்காவடி ஊர்வலம் நடக்கிறது.
பிப்., 4 மாலை, 4:00 மணிக்கு, பெண்களுக்கான கோலப்போட்டி, பிப்.,5 மாலை, 5:00 மணிக்கு, 60 அடி, அக்னி குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. பிப்.,6 மதியம், பொங்கல் விழாவும், இரவு, 8:00 மணிக்கு, மகா பூஜையும், பிப்.,7, பகல் 12:00 மணிக்கு, அன்னதானம், பால்குடம் எடுத்தல், மாலை, 6:00 மணிக்கு, கம்பம், காவிரி செல்லுதல் நிகழ்வும், இரவு, 10:00 மணிக்கு, பிரம்மாண்ட வானவேடிக்கை நிகழ்ச்சியும் நடக்கவுள்ளது. பிப்.,8, காலை, 10:00 மணிக்கு, மஞ்சள் நீராட்டு விழாவுடன், பொங்கல் விழா நிறைவு பெறுகிறது.