பதிவு செய்த நாள்
28
ஜன
2019
01:01
பவானி: பவானி, சீதபாளையம் கிராம, மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று (ஜன., 27ல்) நடந்தது. பவானி, ஜம்பை பேரூராட்சிக்கு உட்பட்ட, சீதபாளையம் கிராமத்தில், விநாயகர், மாரியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த, 24ம் தேதி, கிராம சாந்தி பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து, யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டு, நேற்று (ஜன., 27ல்) காலை, 9:30 மணிக்கு, கும்பாபிஷேகம் நடந்தது. சிவாச்சாரியார்கள், யாகசாலையிலிருந்து, புனிதநீர் கலசங்களை, விநாயகர், மாரியம்மன் கோவில் கோபுர கலசங்களுக்கு எடுத்துச்சென்றனர்.
பின், புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங் காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. இதில், அமைச்சர் கருப்பணன் மற்றும் சீதபாளையம் சுற்றுவட்டார கிராம பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.