பழநி: பழநி முருகன் கோயில் தைப்பூசவிழா முடிந்த பின்னரும், தொடர்ந்து வெளியூர் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து, பறவைக்காவடி, மயில்காவடிகள், அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
பழநி முருகன்கோயில் தைப்பூசவிழா ஜன.,24 வரை நடந்தது. விழா முடிந்த பின்பும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரை, காவடிகள், பால்குடங்களுடன் ஆட்ட, பாட்டத்துடன் வருகின்றனர்.நேற்று நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடிகளுடன் தாரைப்பட்டையுடன் ஆடியபடி வந்தனர். மேலும் உடலில் அலகுகுத்தி பறவைக்காவடியாக கிரேன் வாகனத்தில் தொங்கிக் கொண்டு அடிவாரம், கிரிவீதியில் ஊர்வலமாக வந்தனர். இதேபோல பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பால்குடம், காவடிகளுடன் மலைக்கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.