பதிவு செய்த நாள்
29
ஜன
2019
02:01
சிதம்பரம்:சுவாமி சகஜானந்தா ஜெயந்தி விழாவையொட்டி சமுதாய நல்லிணக்க பேரவை சார்பில் சிறப்பு வழிபாடு நடந்தது.சிதம்பரத்தில் சுவாமி சகஜானந்தா அடிகளாரின் 129வது ஜெயந்தி விழா நடந்தது. பா.ஜ., சமுதாய நல்லிணக்க பேரவை சார்பில் சிதம்பரம் நந்தனார் மடத்தில் கடந்த 23ம் தேதி பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் மேற்கொண்டனர். ஓமக்குளம் சவுந்திரநாயகி அம்மன் சமேத சிவலோகநாதர் கோவில் வளாகத்தில் உள்ள சுவாமி சகஜானந்தாவுக்கு சிறப்பு வழிப்பாடு நடந்தது.
இதனையொட்டி, சவுந்திரநாயகி அம்மன் சமேத சிவலோகநாதருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பின், ராமகிருஷ்ணா வித்யாசாலா பள்ளி மைதானத்தில் ஆயிரம் பெண்கள் பொங்கலிட்டு, தலையில் சுமந்து, சமுதாய நல்லிணக்க பேரவை தலைவர் பெரியசாமி தலைமையில், நந்தனார் மடத்திற்கு ஊர்வலமாக வந்தனர்.அங்கு சுவாமி சகஜானந்தா சிலைக்கு சிறப்பு வழிபாடு செய்தனர். நிகழ்ச்சியில் பா.ஜ., மாநில அமைப்பு செயலர் லட்சுமணன், மாநில நிர்வாகி ஸ்ரீதர், பாலகிருஷ்ணன், சேவா பாரதி வேல்முருகன், விநாயகம், அரசு ரங்கன், வின்சென்ட், சர்சில் உட்பட பலர் பங்கேற்றனர்.