பதிவு செய்த நாள்
29
ஜன
2019
02:01
பந்தலூர்:பந்தலூர் அருகே கொளப்பள்ளி குறிஞ்சிநகர் முருகன் கோவில் திருவிழாவில் பறவை காவடி ஊர்வலம் பரவசப்படுத்தியது.கொளப்பள்ளி குறிஞ்சிநகர் முருகன் கோவில் தைப்பூச தேர் திருவிழா கடந்த, 20ல் முகூர்த்த கால் நடுதலுடன் துவங்கியது. 21 காலை கணபதி ஹோமத்துடன், கொடியேற்றுதல், சாமியார் மலை அடிவாரத்திலிருந்து புனித நீர் எடுத்து வருதல், தைப்பூச சிறப்பு பூஜைகளும், அன்னதான நிகழ்ச்சியும் நடந்தது.
25ல் கொளப்பள்ளி மாரியம்மன் கோவிலிருந்து பால்குட ஊர்வலம், சிறப்பு பூஜைகள், அன்ன தானம், திருக்கல்யாண நிகழ்ச்சியும், 26ல் சிறப்பு பூஜைகள், தேர்பவனி நடந்தது. 27ல் சிறப்பு பூஜைகள், பவளமலை முருகன் கோவிலிலிருந்து அன்னக்காவடி, அன்னதானம் நடந்தது. தொடர்ந்து, ஏலமன்னா நீர் தேக்கத்திலிருந்து துவங்கிய பறவைகாவடி ஊர்வலம் பக்தர்களை பரவசப்படுத்தியது.மேலும், 20 அடி நீளமுள்ள வேல் குத்திய பக்தரும் மெய்சிலிர்க்க வைத்தார். ஊர்வலம் கோவிலை அடைந்தவுடன், இசை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, கொடி இறக்குதல், மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவுபெற்றது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.