மங்கலம்பேட்டை சவுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் மாவிளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜன 2019 02:01
மங்கலம்பேட்டை:மங்கலம்பேட்டை சவுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் 21ம் ஆண்டு தை மாத திருவிழா நேற்று முன்தினம் (ஜன., 27ல்)நடந்தது.இதையொட்டி காலை 7:00 மணிக்கு அம்மனு க்கு அபிஷேக ஆராதனை, காலை 10:00 மணிக்கு மாவிளக்கு பூஜை, பகல் 12:00 மணிக்கு அன்னதானம் நடந்தது.
இரவு 8:00 மணியளவில் அலங்கரித்த வாகனத்தில் அம்மன் வீதியுலா வந்தது பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இதில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று (ஜன28ல்) காலை 10:30 மணியளவில் மஞ்சள் நீர் உற்சவம் நடந்தது.