பதிவு செய்த நாள்
30
ஜன
2019
03:01
ஓமலூர்: தேரோட்டத்தை முன்னிட்டு, மாரியம்மன், வெள்ளி கவசத்தில் காட்சியளித்தார். ஓமலூர் அருகே, பல்பாக்கியில், இந்துசமய அறநிலையத்துறைக்குட்பட்ட, ஓங்காளியம்மன், மகா மாரியம்மன் கோவில்கள் உள்ளன.
அங்கு, தை மாதத்தை முன்னிட்டு, தனித்தனியாக தேரோட்டம் நடக்கும். அதற்காக, கடந்த, 17ல், மாரியம்மனுக்கு பூச்சாட்டுதலுடன், விழா தொடங்கியது. நேற்று முன்தினம், (ஜன., 28ல்) பொடாரியம்மன் பூஜை, சக்தி அழைத்தல் நடந்தது. நேற்று(ஜன., 29ல்), சுவாமிக்கு வெள்ளி கவசம் சாத்துபடி நடந்தது. இன்று (ஜன., 30ல்) மாலை, 4:00 மணிக்கு, ஓங்காளியம்மன் தேரோட்டம் நடக்கும்.
தொடர்ந்து, வண்டி வேடிக்கை, கலைநிகழ்ச்சி நடக்கவுள்ளது. நாளை, மாரியம்மன் தேரோட்டம், பிப்., 1ல், கரகம், காவடி, மாவிளக்கு பூஜை, சத்தாபரணம், 2ல், சுவாமி மெரமனை யுடன் விழா நிறைவடையும்.