பதிவு செய்த நாள்
02
பிப்
2019
12:02
ஈரோடு: ஈரோடு, கோட்டை, சின்னபாவடி பத்ர காளியம்மன் கோவிலில், பொங்கல், குண்டம் திருவிழா, கடந்த, 28ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான, குண்டம் இறங்குதல் நேற்று நடந்தது. கோவில் தலைமை பூசாரி மணிகண்டன், சிறப்பு பூஜை, வாஸ்து பூஜை செய்து, முதலில் குண்டம் இறங்கி, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதையடுத்து, 1,000க்கும் மேற்பட்ட பெண்கள், சிறுவர், சிறுமியர் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதை தொடர்ந்து, பொங்கல் வைபவம், மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. இரவில் அம்மன் திருவீதி உலா நடந்தது.