ராஜபாளையம் :ராஜபாளையம்-தென்காசி ரோட்டில் உள்ள சொக்கர் கோயிலில் மாசி பிரம்மோற்ஸவ விழா இன்று காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. மாலை 6 மணிக்கு தேவார இசை நடக்கிறது. பத்து நாள்கள் நடைபெற உள்ள விழாவில், பல்வேறு வாகனங்களில் சுவாமி மற்றும் அம்பாள் வீதி உலா நடைபெறும். மார்ச் 4ல் காலை 10.30மணிக்கு திருக்கல்யாணம் நடக்க உள்ளது. அன்று இரவு பூப்பல்லக்கில் வீதி உலா நடைபெறும். மார்ச் 5ல் இரவு 7 மணிக்கு தெப்போற்ஸவம் நடக்கும். மார்ச் 6ல் காலை 6.30 மணிக்கு தேர் திருவிழா, கடைசிநாளான மார்ச் 7ல் பஞ்சமூர்த்தி புறப்பாடு நடக்க உள்ளது. ஏற்பாடுகளை அறங்காவலர் பி.ஆர்.ராமசுப்பிரமணிய ராஜா மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.