பதிவு செய்த நாள்
02
பிப்
2019
02:02
திருப்பூர்:ஜெயின் தேராபந்த் அறச்சங்கத்தின், 11வது குரு, ஆச்சார்ய ஸ்ரீ மகாஸ்ரமண், மூன்று நாள் பயணமாக திருப்பூர் வந்தார். அவருக்கு, வரவேற்பு அளிக்கப்பட்டது.
நல்லெண்ணத்தை மக்களிடம் பரப்புவது, நன்னெறியை நடைமுறைப்படுத்தி பரப்புவது, போதை ஒழிப்பு இயக்கம் ஆகிய மூன்று கோட்பாடுகளை வலியுறுத்தி, ஜெயின் தேராபந்த் அறச்சங்கத்தின் குரு, மகாஸ்ரமண், அஹிம்சை பயணத்தை துவக்கியுள்ளார்.இந்தியா, நேபாளம், பூடான் ஆகிய மூன்று நாடுகள், 19 மாநிலங்கள், 15 ஆயிரம் கி.மீ., தொலைவுக்கும் அதிகமாக நடைப்பயணம் நடந்து வருகிறது.
கடந்த, 2014 நவ., 9ம் தேதி, டில்லியில் துவங்கிய நடைபயணம், பல்வேறு பகுதிகளில் சென்று கொண்டிருக்கிறது.தமிழ்நாடு, ராஜஸ்தான், அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்கள், அரசு விருந்தினராக இவரை அறிவித்துள்ளன. ஜாதி, இன வேறுபாடு களை களைந்து, அஹிம்சை நெடும் பயணம் நடக்கிறது.
ஜெயின் துறவியர், எப்போதும் பாதயாத்திரை மேற்கொள்கின்றனர். தங்கள் பொருட்களை, தாங்களே சுமந்து செல்கின்றனர். இவர்களுக்கு, வீடோ, ஆசிரமமோ இல்லை. பேசும் போது, காற்றில் உள்ள நுண்ணுயிர்கள் சாகக்கூடாது என்பதற்காக, வாயை துணியால் கட்டிக் கொண்டிருக்கின்றனர்.
திருப்பூர் வந்துள்ள துறவிகளை, திருப்பூர், வர்தமான் மேஹாத்சவ் வியவஸ்தா சமிதி நிர்வாகிகள், நேற்று (பிப்., 1ல்) வரவேற்றனர். அதன்பின், அவர், பக்தர்கள் நேற்று (பிப்., 1ல்) அருளுரை வழங்கினர்.