ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு நாளை(பிப்.4) நாள் முழுவதும் திறந்திருக்கும். அமாவாசையை முன்னிட்டு தமிழகம் உட்பட வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் கோயிலுக்கு வருவார்கள். ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் நீராடிவிட்டு கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில் பக்தர்கள் நீராடுவார்கள்.இதற்காக நாளை (பிப்.4) ராமநாதசுவாமி கோயில் அதிகாலை நடை திறக்கப்பட்டு 2:30 முதல் 3:30 மணி வரை ஸ்படிக லிங்க அபிஷேக பூஜை நடக்கிறது. காலை 7:00 மணிக்கு கோயிலில் இருந்து தங்க ரிஷப வாகனத்தில் ராமநாத சுவாமி பர்வதவர்த்தனி அம்பாள் மற்றும் ராமர் சீதை பஞ்ச மூர்த்திகளுடன் அக்னிதீர்த்த கடற்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி நடக்கிறது.இரவு 7:00 மணிக்கு அக்னி தீர்த்த கடற்கரையில் இருந்து சுவாமி அம்பாள் புறப்பாடாகி வீதி உலா நடக்கிறது.தொடர்ந்து ஸ்ரீராமர் சீதை மற்றும் லட்சுமணர் வெள்ளித்தேரில் உலா வருகின்றனர். இரவு 8:30 மணி வரை நடை திறந்திருக்கும் என கோயில் இணைஆணையர் மங்கையர்கரசி தெரிவித்துள்ளார்.