பெரியகுளம்:பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலில் அன்னை சிங்கமுக ப்ரத்தியங்கிரா தேவியின் தை அமாவாசை நிகும்பல யாக பூஜை நடந்தது.
முன்னதாக கணபதி ஹோமம், சாயி ஈஸ்வரர், நந்தீஸ்வரர் பூஜை மற்றும் மகா காளி பூஜை நடந்தது. பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னை சியாமளாபூஜைகள் நடத்தினார். சாய்பாபா விற்கு சாயி அஷ்டோத்திர பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை எம்.எம்.பி.டி., டிரஸ்ட் நிர்வாகிகள் டாக்டர் முத்துவிஜயன், வர்த்தக பிரமுகர் முத்துமகேஸ்வரன் செய்திருந்தனர்.