நடுவீரப்பட்டு:நடுவீரப்பட்டு காமாட்சியம்மன் சமேத கைலாநாதர் கோவிலில் உள்ள சக்கரா சக்திபீட காளிகாதேவிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
நடுவீரப்பட்டு காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர் கோவிலில் பல ஆண்டுகளுக்கு முன், எருக்கம்பால் சித்தரால் பூஜிக்கப்பட்டு வழிபட்டு வந்த சுவாமி ஸ்ரீசக்கரா காளிகாதேவிக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், மாலை ராகுகாலத்தில் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது.
இந்த பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டால், மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அணுகூலம் உண்டாகும் என்பது ஐதீகம்.இங்கு நடக்கும் அபிஷேக பாலை பிடித்து, நிலத்தில் உள்ள பயிர்களில் தெளித்தால் பூச்சிகள் தொல்லை குறையும்.இதனால் பக்தர்கள் பூஜையில் கலந்து கொண்டு சக்கரா சக்திபீட காளிகாதேவியை வழிபட்டு வருகின்றனர். நேற்று (பிப்., 3ல்) மாலை 4:30 மணிக்கு சக்கரா காளிகாதேவிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது.