Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வெள்ளியங்கிரி மலையேற்றம் துவக்கம்: ... திருத்தணி முருகன் கோவிலில் 9ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை அரங்கநாதர் மாசி தேர்த்திருவிழா: 13ல் கொடியேற்றம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 பிப்
2019
01:02

மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், மாசிமகத் தேர்த்திருவிழா கொடியேற்றம் வரும், 13ம் தேதியும், தேரோட்டம், 19ம் தேதியும் நடைபெற உள்ளது. கோவை மாவட்டத்தில் வைணவ ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது, காரமடை அரங்கநாதர் கோவில். இங்கு மாசிமகத் தேரோட்டம் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.இந்தாண்டு தேர்த்திருவிழா வரும், 12ம் தேதி கிராமசாந்தி, 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்னவாகனம், சிம்மவாகனம், அனுமந்தவாகனம், கருடவாகனம் ஆகிய வாகனங்களில் அரங்கநாதர் சுவாமி திருவீதி உலா நடைபெற உள்ளது.

பின், 17ம் தேதி பெட்டத்தம்மன் அழைப்பும், 18ம் தேதி காலை திருக்கல்யாண உற்சவமும், அன்று இரவு யானை வாகன உற்சவமும் நடைபெறுகிறது.19ம் தேதி காலை ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாதப் பெருமாள் தேருக்கு எழுந்தருள்கிறார். மதியம், 2:45 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து தண்ணீர் சேவை, பந்தசேவை நிகழ்ச்சியும், 20ம் தேதி குதிரை வாகனத்தில் பரிவேட்டையும், 21ம் தேதி சஷே வாகனத்தில் தெப்போற்சவமும், 22ம் தேதி சாற்றுமுறை உற்சவமும், 23ம் தேதி விழா நிறைவும் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு மழை வளம் வேண்டி, ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்:அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக விழா நடந்தது.அன்னூர் கரி வரதராஜ ... மேலும்
 
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar