பதிவு செய்த நாள்
07
பிப்
2019
01:02
சேலம்: அம்மன் திருவிழாவையொட்டி நடந்த தீமிதி விழாவில், திரளான பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். சேலம், களரம்பட்டி, மாரியம்மன், காளியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 22ல், பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் சத்தாபரணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை, அம்மனுக்கு, நூற்றுக்கணக்கான பெண்கள், பொங்கல் வைத்து, ஆடு, கோழிகளை பலியிட்டு, சுவாமியை வழிபட்டனர். மாலையில் நடந்த தீ மிதிவிழாவில், 500க்கும் மேற்பட்டோர், பக்தி பரவசத்துடன் தீ மிதித்து, வேண்டுதலை நிறைவேற்றினர். பலர், அலகு குத்தி, கரகம் எடுத்து வந்து, நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மேட்டூரில்...: மேட்டூர், காவேரி நகர், காளியம்மன், மாரியம்மன் கோவில் பண்டிகையை முன்னிட்டு, நேற்று காலை அக்னிகுண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், மேட்டூர்மட்டு மின்றி, சேலம், ஈரோடு மாவட்டங்ளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள், தீ மிதித்து, வேண்டுதலை நிறைவேற்றினர்.
தேரோட்டம்: தாரமங்கலம், செலவடை, ஓங்காளியம்மன் கோவில் பண்டிகையை முன்னிட்டு, நேற்று முன்தினம், பூச்சாட்டுதல் நடந்தது. நேற்று காலை, கொடியேற்றம், பொங்கல் வைபவம், திருக்கல்யாண உற்சவம் நடந்தது. மாலை நடந்த தேரோட்டத்தில், திரளான பக்தர்கள், வடம்பிடித்து இழுத்து, கோவிலை வலம் வந்தனர். இதையொட்டி, மூலவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இன்று காலை, அக்னி குண்டம் திறப்பு, சிறப்பு பூஜை, மாலை, குண்டம் இறங்குதல், இரவு, சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா, வாணவேடிக்கை, கிராமிய நடனம் நடக்கும். நாளை, மஞ்சள் நீராட்டத்துடன் விழா நிறைவடையும்.