பதிவு செய்த நாள்
09
பிப்
2019
02:02
திருப்புத்தூர்:திருப்புத்தூரில் திருக்கோஷ்டியூர் மாசி தெப்ப உற்ஸவ ஏற்பாட்டிற்கான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடந்தது.
கலெக்டர் பி.ஏ.,(பொது) சக்திவேல் தலைமை வகித்தார். தாசில்தார் தங்கமணி முன்னிலை வகித்தார். டி.எஸ்.பி.,அண்ணாத்துரை, துணை தாசில்தார் சுரேஷ் , மருத்துவ அலுவலர் செந்தில், பி.டி.ஓ., ஸ்ரீதர்,பேரூராட்சி செயல் அலுவலர் சண்முகம், சிவகங்கை தேவஸ்தான கண்காணிப்பாளர் சேவற்கொடியோன் மற்றும் திருக்கோஷ்டியூர் மக்களும் பங்கேற்றனர்.
அடிப்படைத் தேவை குறித்து மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. வழக்கமான அடிப்படை வசதிகளுடன் கூடுதலாக ஆண்களுக்கு கழிப்பறை வசதி, நிழற்கூரை, பஸ்வசதி, குடிநீர் வினியோகம், கோயில் அருகே பக்தர்கள் தரிசன வரிசைக்கு நிழல் கூரை அமைக்க கோரப்பட்டது.