பதிவு செய்த நாள்
09
பிப்
2019
03:02
திருவள்ளூர்: திருவள்ளூர், பெருமாள் செட்டி தெருவில் உள்ள, ஓம் ஆனந்த சாய்ராம் தியானக்கூடத்தில், சிறப்பு அபிஷேகம், ஆராதனை, நேற்று முன்தினம் (பிப்., 7ல்) காலை, மதியம் நடந்தது.
மாலையில், ஆனந்த சாய்ராம், பல்லக்கில் பவனி வந்தார்.ஒண்டிக்குப்பம், சாய்பாபா கோவிலில், காலை, மதியம், மாலை மற்றும் இரவு என, நான்கு வேளைகளில் ஆரத்தி நடந்தது.இதே போல், தேவி மீனாட்சி நகரில் உள்ள சாய்பாபா கோவிலில், சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடந்தது.
தட்சிணாமூர்த்திக்கு பாலாபிஷேகம்திருவள்ளூர்: திருவள்ளூர், யோகஞான தட்சிணாமூர்த்தி கோவிலில், குரு பகவானுக்கு, நேற்று முன்தினம்( பிப்., 7ல்), 108 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது. மூலவருக்கு, மலர் அலங்காரம் செய்து, தீபாராதனை நடந்தது.திருப்பாச்சூர், தங்காதலி அம்மன் உடனுறை வாசீஸ்வரர் கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்திக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது.
திருவள்ளூர், திரிபுர சுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில், சிவ -- விஷ்ணு கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது.இதில், திருவள்ளூர், காக்களூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.