பதிவு செய்த நாள்
09
பிப்
2019
03:02
திருத்தணி: திருத்தணி, முருகன் மலைக்கோவில் அலுவலகத்தில் உள்ள தொலைபேசி, ஒரு மாதமாக பழுதடைந்துள்ளது.திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு, தினமும், பல மாநிலங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவரை தரிசித்து செல்கின்றனர். மூலவர் மற்றும் உற்சவருக்கு செய்யப்படும் அபிஷேகம், சேவைகள், கோவில் நடை திறக்கும் நேரம் குறித்து, பக்தர்கள் அறிய விரும்புகின்றனர்.
இதற்காக, கோவில் நிர்வாகம் சார்பில், மலைக்கோவிலில் அலுவலகம் அமைத்து, 044 - 2788 5243 என்ற எண்ணில், பி.எஸ்.என்.எல்., தொலைபேசி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நம்பரில் தொடர்பு கொண்டு, பக்தர்கள், தகவலை கேட்பர்.
பிற மாநிலத்தில் இருந்து வரும் பக்தர்கள், மேற்கண்ட தொலைபேசியில் தொடர்பு கொண்டு அபிஷேகம், சேவைகளுக்கு பெயர் முன்பதிவு செய்து, ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்துகின்றனர். இந்நிலையில், ஒரு மாதமாக, இந்த தொலைபேசி எண் பழுதடைந்துள்ள தால், பக்தர்கள் சிரமப்படுகின்றனர்.
இது குறித்து, கோவில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:மலைக்கோவிலில் உள்ள தொலைபேசி பழுதடைந்துள்ளது என, பி.எஸ்.என்.எல்., அலுவலகத்திற்கு தெரிவித்து விட்டோம். அவர்கள் வந்து சீரமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில், தொலைபேசிபழுது பார்க்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.