பதிவு செய்த நாள்
11
பிப்
2019
03:02
வெள்ளகோவில்:வெள்ளகோவில் அருகே மூலனூர் போளரை ஸ்ரீ காளியம்மன் கோவில்,கும்பாபிஷேக விழா, நேற்று (பிப்., 10ல்)நடந்தது.
இக்கோவில், 200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கடந்த, 8ல், யாக பூஜையுடன், கும்பாபிஷேக விழா துவங்கியது.
விக்னேஸ்வர பூஜை, பஞ்சகாவ்ய பூஜை, வேதபாராயணம், பூர்ணாகுதி பூஜை, முதற்கால யாக பூஜை, இரண்டாம் காலயாக பூஜை, மூன்றாம் கால யாக பூஜைகள் நடந்தன.நேற்று (பிப்., 10ல்) அதிகாலை, 5 மணியளவில் புண்யாகம், மகா பூர்ணாகுதி, நான்காம் காலயாக பூஜை மற்றும் மகா பூர்ணாகுதி நடந்தது. காலை, 9.30 மணிக்கு, கரையூர், கண்ணன் சிவம் சுவாமிகள் தலைமையில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
திரளான பக்தர்கள் பங்கேற்று கோபுர தரிசனம் மற்றும் சுவாமி தரிசனம் செய்தனர்; அன்னதானம் வழங்கப்பட்டது.போளரை, மேட்டுவலசு, கணபதிபாளையம், வஞ்சிபாளையம், துலுக்கவலசு, ரங்கைய கவுண்டன்வலசு, ஊர்நாய்க்கன்வலசு ஆகிய, 7 ஊர் மக்கள் இணைந்து, இவ்விழாவை, பல ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.