பதிவு செய்த நாள்
11
பிப்
2019
05:02
மாமல்லபுரம்: புதுப்பட்டினத்தில், புதிதாக அமையும், தசமஹாவித்யா கோவிலில், பிரமாண்ட பஞ்சலோக திரிசூலம், நேற்று 10 ல், பிரதிஷ்டை செய்யப்பட்டது.கல்பாக்கம், புதுப் பட்டினத்தில்,
சுவாமி ஓங்காரனந்தா ஆஸ்ரம வளாகத்தில், ஞானசித்தர் கோவில் அமைந்துள்ளது. இதே வளாகத்தில், அம்பிகைக்கான, தசமஹாவித்யா கோவில், தற்போது அமைக்கப்படுகிறது.
இக்கோவிலில், அம்பிகையின் பத்து அம்சங்களான, காளி, தாரா, திரிபுரசுந்தரி, புவனேஸ்வரி, பைரவி, சின்னமஸ்தா, பூமாவதி, பகலாமுகி, மாதங்கி, கமலா ஆகியோருக்கு, தனித்தனி சன்னிதிகள் அமைகிறது.சூலத்தின் முன்புறம் அம்பிகை, பின்புறம் கலசம் என வடிவமைக்கப்பட்டு உள்ளது. இது ஒன்பது அடி உயரம், 750 கிலோ எடை கொண்ட, ஐம்பொன் திரிசூலம். கோவிலின் முன், இந்த திரிசூலம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
சுவாமி ஓங்காரனந்தா முன்னிலையில், காலை, 5:00 மணி முதல், சிறப்பு யாகம் நடந்து.
11:00 மணிக்கு, திரிசூலத்தில் புனித நீரூற்றி, பிரதிஷ்டை செய்யப்பட்டது.அதன் வழிபாட்டு பொறுப்பை, கோடீஸ்வரானந்தா ஏற்றார். ஆஸ்ரம புதிய கட்டட கிரஹபிரவேசமும் நடந்தது.