பதிவு செய்த நாள்
11
பிப்
2019
05:02
அச்சிறுப்பாக்கம்:அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.மதுராந்தகம் தாலுகா, அச்சிறுப்பாக்கத்தில், இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சிஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், 2001ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதற்கடுத்து, 18 ஆண்டுகளுக்கு பின், நேற்று (பிப்., 10ல்)கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. நேற்று (பிப்., 10ல்)காலை, கலசங்கள் புறப்பாடு நடைபெற்றன.
கும்பாபிஷேகம் நேற்று (பிப்., 10ல்)காலை, 10:00 மணிக்கு நடைபெற்றது. மாலை அகத்தியருக்கு திருமண கோலத்தில் காட்சி தரும் வைபவமும், கிரிவலமும் நடைபெற்றன.
கும்பாபிஷேகத்தைக் காணவும், ஆட்சீஸ்வரரைத் தரிசிக்கவும் ஏராளமான பக்தர்கள் திரண்டதால், நேற்று, (பிப்., 10ல்)அச்சிறுப்பாக்கம் விழாக்கோலம் பூண்டிருந்தது.