பதிவு செய்த நாள்
11
பிப்
2019
05:02
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், இந்தாண்டு நடைபெறும் பிரம்மோற்சவ பெருவிழா, நேற்று (பிப்., 10ல்) கொடியேற்றத்துடன் துவங்கியது.இதற்காக செம்பாக்கத்தில் பாலசுப்ர மணியம் செங்குந்த மரபினர் வகையரால், பிரத்யேகமாக நேற்று முன்தினம் (பிப்., 9ல்) தயாரித்த கொடிகயிறினை கொண்டு, கோவில் சிவாச்சாரியார்கள் முன்னிலையில் கொடி ஏற்றப்பட்டது. காலை 8:00 மணியளவில், கோவில் வட்ட மண்டபத்தில், உற்சவர்
கந்தசுவாமி பெருமான் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.பின், கொடி மரம், கொடி உள்ளிட்டவைகளுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தன.
தொடர்ந்து, பக்தர்களின் கந்தா, சரவணா, அரோகரா கோஷத்துடன், காலை, 9:45 மணிக்கு, உற்சவ கொடி ஏற்றப்பட்டது. பின், 10:40 மணிக்கு, உற்சவர் கந்தசுவாமி பெருமான், வள்ளி, தெய்வானையுடன் மாட வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவில் வளாகத்தில் பிரார்த்தனையாக காவடி எடுத்தல், காதுகுத்தல், திருமண
வைபவங்கள் நடந்தன.அதேபோல் தாழம்பூர் திரிசக்தி அம்மன் கோவிலிலும் பிரம்மோற்சவ விழாவில் நேற்று (பிப்., 10ல்) கொடியேற்றத்துடன் நடந்தது. குமரன் நகரில் உள்ள
கெங்கையம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.