பதிவு செய்த நாள்
12
பிப்
2019
03:02
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, மாகறல் கிராமத்தில், புவனநாயகி உடனுறை மாகறலீஸ்வரர் கோவில் உள்ளது. சைவ குரவர்களில் ஒருவரான திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரால் பாடல் பெற்ற இக்கோவிலில், ஆண்டுதோறும் மாசி மாதம், மாசி மகம் உற்சவம், 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும்.அதன்படி, இந்தாண்டு உற்சவம், நேற்று முன்தினம் பிப்., 10ல், , காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இரவு, இடப வாகன உற்சவம் நடந்தது.ஐந்தாம் நாள், பிரபல உற்சவமான, திருக்கல்யாணம், பிப்., 14ல், இரவு நடைபெறுகிறது. அதேபோன்று, ஏழாம் நாளான, பிப்., 16ல், மாலை, 5:00 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.