நெல்லிக்குப்பம் :மேல்பட்டாம்பாக்கத்தில் ஜெ., பிறந்த நாள் விழா 3 நாட்கள் கொண்டாடப்பட்டது. மேல்பட்டாம்பாக்கம் பேரூர் அ.தி.மு.க., சார்பில் தமிழக முதல்வர் ஜெலலிதா பிறந்த நாள் விழா தொடர்ந்து மூன்று நாட்கள் கொண்டாடினர். சிவலோகநாதர் கோவில் உட்பட பல கோவில்களில் சிறப்பு அபிஷேகம் செய்து அன்னதானம் வழங்கினர். பெண்கள் நடுநிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு பேரூராட்சி தலைவர் அர்ச்சுணன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் இளஞ்செழியன் வரவற்றார். அமைச்சர் சம்பத் மாணவர்களுக்கு நோட்டுகளை வழங்கி பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டார். பேரூராட்சி துணைத்தலைவர் செல்வி, கவுன்சிலர்கள் நவாப், பாபு, அ.தி.மு.க., சவுந்தர்ராஜன், சிவராமகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.