தேவதானப்பட்டி மாசி மகா சிவராத்திரி திருவிழா முகூர்த்தக்கால் நடல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12பிப் 2019 04:02
தேவதானப்பட்டி:தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் மாசி மகா சிவராத்திரி திருவிழாவிற்காக இன்று (பிப்.,12ல்) காலை முகூர்த்தக்கால் நடப்படுகிறது.
தேவதானப்பட்டி அருகேயுள்ள மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயிலில் ஆண்டு தோறும் மகாசிவராத்திரிதிருவிழா ஒருவாரம் சிறப்பாக நடைபெறும். இவ்விழாவில் தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களைசேர்ந்த ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்வர். இந்தாண்டு மாசி மகா சிவராத்திரி திருவிழா மார்ச் 4 ல் துவங்குகிறது. இதற்காக இன்று (பிப்., 12ல்) காலை 8:00 மணிக்கு மேல் 9:00 மணிக்குள்முகூர்த்தக்கால் நடப்படுகிறது.