பதிவு செய்த நாள்
13
பிப்
2019
02:02
சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவிலில், கடந்த, 35 ஆண்டுகளுக்கு முன், மாட்டு வண்டி, மலை ஏறிய நாளை (பிப்., 14ல்) கொண்டாடும் விதமாக, சிறப்பு பூஜை நடந்தது.
ஈரோடு மாவட்டதில், புகழ் பெற்ற சென்னிமலை சுப்பிர மணிய சுவாமி கோவிலில், கடந்த, 1984ம் ஆண்டில், 1,320 படிகள் வழியாக, இரண்டு எருதுகள் பூட்டிய மாட்டு வண்டி, மலை ஏறிய அதிசயம் நடந்தது.
வேட்டுவபாளையம் பழனிசாமி பூசாரி, மாட்டு வண்டியின் மீது அமர்ந்து வண்டியை ஓட்டினார். அவரது வழியில், பொன்னுசாமி பூசாரி, தற்போது பூஜைகளை முன்னின்று நடத்தி வருகிறார். மாட்டு வண்டி மலை ஏறி, 35 ஆண்டுகள் நிறைவு பெற்று, 36ம் ஆண்டு பிறப்பதை கொண்டாடும் விதமாக, நேற்று (பிப்., 12ல்) சென்னிமலை முருகன் கோவிலில், சிறப்பு அபிஷேகம், பூஜைகள், அன்னதானம் நடந்தன. விழாவில் கோவில் செயல் அலுவலர் அருள்குமார், வேட்டுவபாளையம் பொன்னுசாமி பூசாரி, கோவில் தலைமை கணக்கர் ராஜீ, பாலசுப்பிர மணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.