நடுவீரப்பட்டு கைலாசநாதர் கோவிலில் ரதசப்தமி திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14பிப் 2019 02:02
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு காமாட்சி அம்மன் சமேத கைலாசநாதர் கோவிலில் நேற்று முன் தினம் (பிப்., 12ல்) ரதசப்தமியை முன்னிட்டு திருக்கல்யாணம் நடந்தது.
நடுவீரப்பட்டு காமாட்சி அம்மன் சமேத கைலாசநாதர் கோவிலில் நேற்று முன்தினம் 12ம் தேதி செவ்வாய்கிழமை ரதசப்தமி திருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு அன்று காலை 6:00 மணிக்கு சுவாமிக்கு அபிஷேக ஆராதனை நடந்து, வீதியுலா வந்து கெடில நதிக்கரையில் தீர்த்தவாரி நடந்தது.மதியம் 12:00 மணிக்கு விநாயகர், காமாட்சி அம்மன் சமேத கைலாசநாதர், வள்ளி தேவசேனா சுப்பரமணியர், தனி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இரவு 8:30 மணிக்கு காமாட்சி அம்மன் சமேத கைலாசநாதருக்கு திருக்கல்யாணம் நடந்து, பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது.