பதிவு செய்த நாள்
14
பிப்
2019
03:02
கோபிசெட்டிபாளையம்: கோபி அருகே, பச்சமலை முருகன் கோவிலில், ராகு - கேது பெயர்ச்சி விழா கோலாகலமாக நேற்று (பிப்., 13ல்) நடந்தது. காலை, 8:30 முதல், மதியம் 12:00 மணி வரை, ராகு - கேது பெயர்ச்சி, கலச பூஜை, நவக்கிரஹ ஆவாஹனம், சிறப்பு பரிகாரம் நடந்தது. மதியம், 12:00 மணிக்கு, 108 திரவியங்களை கொண்டு, நவக்கிரஹ மூர்த்திகளுக்கு அபிஷேகம் நடந்தது. திருமஞ்சனம், மஞ்சள் தூள், அரிசி மாவு, பன்னீர் சந்தனம், தேன், பால், தயிர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. மதியம், 1:00 மணிக்கு, சிறப்பு பரிகார அர்ச்சனை நடந்தது.
பூஜையில், கோபி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். இதேபோல், கவுந்தப்பாடி அருகே தம்பிக்கலை ஐயன் கோவிலில், ராகு - கேது பெயர்ச்சி விழா, கோலாகலமாக நேற்று (பிப்., 13ல்) நடந்தது. மதியம், 12:00 மணிக்கு, யாக பூஜை, பரிகார ஹோமம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. இந்த பூஜையில், கவுந்தப்பாடி, தங்கமேடு, பெருந்துறை, காஞ்சிக்கோவில் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.